முரசோவியம் HOME PRESS RELEASE EVENT PHOTOS


நாள்/Date: 17 June 2012 ( ஞாயிறு/Sunday )
நேரம்/Time: 6.30 - 8.30p.m.
உணவு/dinner: 8.30pm
இடம்/Place: Civic Center, Petaling Jaya, Selangor
மலேசியாவில் முரசு என்று எந்­தத் திசை­யில் இருந்து சொன்­னா­லும் ஒரு­வரையே குறிக்­கும். அவர்­தாம் பாப்­பாவின் பா­வலர் என்று தமிழ் நல்­லுள்­ளங்­களால் பா­ராட்­டப்­பெ­றும் கவி­ஞர், தமி­ழறிஞர், முனை­வர் திரு முரசு நெடு­மாறன் அவர்­கள். கேரித்­தீவில் பிறந்து வளர்ந்து தமிழ்ப்­பள்ளி ஆசிரி­ய­ராய்த் தொ­டங்கி மலே­சியப் புத்­ரா பல்­கலைக்­கழக பகுதி நேரத் தமிழ் விரி­வுரை­யா­ள­ரா­க­வும் சென்­னை உல­கத் தமிழ் ஆராய்ச்சி நிறு­வனத்­தில் வருகை­தரு பேரா­சிரி­ய­ரா­க­வும் பணி­யாற்­றிய­வர் முனை­வர் முரசு நெடு­மாறன் அவர்­கள். கடந்த தைத்­திங்­கள் முதல் நா­ளில் 75வது அகவை நிறைவு கண்ட முனை­வர் தம் வாழ்­வில் தமி­ழோடு, தமிழ­ரோடு நடந்­தவர். சுய­மரி­யா­தைக் கொள்­கை­யோடு பகுத்­தறி வாழ்க்­கை­யைப் பின்­பற்றிய கொள்­கை­யா­ளர். தமிழர் நலன், தமிழ் வளர்ச்சி, இலக்­கிய ஆய்வு­கள், கவி­தை­கள், இலக்­கிய நாட­கங்­கள், குழந்தை இலக்­கியம், மாண­வர் கல்வி என்று இவ­ரது தொண்­டு­கள் பல துறை­களில் கிளை பரப்­பின. அவர் படைப்­புக­ளில் தலை நிமிர்ந்து நிற்­கும் நூற்­கள் மலே­சிய சிங்­கப்­பூர் தமிழர்­க­ளின் அடை­யா­ளத்தை நமக்கு மீட்­டுத்­தரும் 'மலே­சியத் தமிழ்க் கவி­தைக் களஞ்­சியம்', 'மலே­சியத் தமி­ழரும் தமி­ழும்' என்ற இரு நூற்­கள். எளிய குடும்­பத்­தில் பிறந்து எளிய வாழ்வே வாழ்ந்து கல்வி, கலை, இலக்­கியத்­திறன்­களை முயன்று வளர்த்து அவற்றின் வளங்­களை சமு­தாயத்­திற்கே திரும்­பவும் படைத்­தளித்து ஆல­மரம்­போல் உயர்ந்து படர்ந்து தமிழுக்­குப் பய­னுள்ள ஒரு­வ­ராய் தன்­ன­டக்­கத்­தோடு வாழ்ந்து வரும் முனை­வர் முரசு நெடு­மாறன் அவர்­களின் தமிழ்க்­கொடை­களைப் பா­ராட்டி நன்றி கூறும் வகை­யில் 'முர­சோ­வியம்' எனும் விழாவை அவ­ரது மாணவர்­களும் நண்­பர்­களும் சமு­தாயப் பெரு­மக்­களும் அவ­ரது குடும்ப உறவு­களும் முன்­னின்று நடத்­தவி­ருக்­கின்­ற­னர். இந்த விழா­வில் கல­ந்து கொள்க களிப்பு கொள்க என்று உங்­களை அன்­புடன் அழைக்­கிறோம்.